31ம்தேதி ‘அமைதிப்படை – 2’ இசை வெளியீடு

amaithi-padai-2ணிவண்ணன், சத்யராஜ் கூட்டணியில் உருவாகி வரும் ‘நாகராஜசோழன் எம்.ஏ.எம்.எல்.ஏ – அமைதிப்படை – 2’ படத்தின் இசை வெளியீடு இம்மாதம் 31ம் தேதி நடைபெற உள்ளது.

தமிழ் சினிமாவில்  அரசியலை மையமாக வைத்து  வெளிவந்த  திரைப்படங்களில் அனைவரும் ரசித்த படம் மணிவண்ணன் – சத்யராஜ் கூட்டணியில் உருவான ‘அமைதிப்படை’.  இன்றும் இப்படத்தைதொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் போதெல்லாம் பார்த்து ரசிப்பவர்கள் பலர்.

இந்த கூட்டணி மீண்டும் இணைந்து அமைதிப்படையின் இரண்டாம் பாகமான ‘நாகராஜசோழன் எம்.ஏ.எம்.எல்.ஏ’ படத்தை உருவாக்கி வருகிறது.

இப்படத்தின் இசை வெளியீடு இம்மாதம் 31ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. ஜேம்ஸ் வசந்தன் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்களை இயக்குனர் பாலா வெளியிட சரத்குமார் பெற்றுக் கொள்கிறார். டிரைலரை இயக்குனர் அமீர் வெளியிட தயாரிப்பாளர் எஸ். தாணு பெற்றுக் கொள்கிறார். மற்றும் பல திரையுலகப் பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள்.

Read Previous

‘மாங்கா’ ஹீரோவான பிரேம்ஜி…

Read Next

எம் டிவி விருது பெற்ற ஜி.வி. பிரகாஷ்குமார்

Most Popular