சுசீந்திரன் இயக்கத்தில் ‘சாம்பியன்’

‘வெண்ணிலா கபடி குழு, ஜீவா’ போன்ற விளையாட்டை மையமாக கொண்ட வெற்றித் திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் சுசீந்திரன் தற்போது கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து ‘சாம்பியன்’ என்ற படத்தை ஆரம்பித்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது. தயாரிப்பாளர் G.K. ரெட்டி கேமராவை இயக்கி படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.

ரோஷன் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் மிருணாளினி கதாநாயகியாக நடிக்கிறார். G.K. ரெட்டி , ‘அஞ்சாதே’ நரேன் , R.K. சுரேஷ் , ஜெயபிரகாஷ் , ஹரிஷ் உத்தமன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

அரோல் குரோலி இசையில், சுஜித் சாரங் ஒளிப்பதிவில் உருவாகும் இப்படத்தில் பிரபல கால்பந்து விளையாட்டு வீரர் விஜயன் படத்தை ஒருங்கிணைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறார்.

களஞ்சியம் சினி ஆர்ட்ஸ் தயாரிப்பில் K.ராகவி இப்படத்தைத் தயாரிக்கிறார். டிசம்பர் வெளியீடாக இப்படம் வெளியாக உள்ளது.

Read Previous

‘காலா’வுக்குத் தடை, கர்நாடகாவில் வெளியாகுமா ?

Read Next

ஹிந்திப் படத்தில் அறிமுகமாகும் வேதிகா

Most Popular