தமிழில் 2006ம் ஆண்டு வெளிவந்த ‘மதராசி’ படம் மூலம் நடிகையாக அறிமகமானவர் வேதிகா. பின்னர், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் பல படங்களில் நடித்திருக்கிறார். தமிழில் “முனி, பரதேசி, காவியத் தலைவன்’ ஆகிய படங்கள் அவர் நடித்த சில முக்கியமான படங்கள்.
தற்போது ‘காஞ்சனா 3’ படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். தவிர, தமிழ், மலையாளத்தில் உருவாகி வரும் ‘வினோதன்’ படத்திலும், கன்னடத்தில் ‘ஹோம் மினிஸ்டர்’ படத்திலும் நடித்து வருகிறார்.
அடுத்து ஹிந்தியில் அறிமுகமாக உள்ளார் வேதிகா. கமல்ஹாசன் நடித்த ‘பாபநாசம்’ படத்தை இயக்கிய ஜீது ஜோசப் ஹிந்தியில் அறிமுகமாக உள்ள ‘தி பாடி’ என்ற படத்தில்தான் வேதிகா நாயகியாக அறிமுகமாகப் போகிறார். இப்படம் ‘த பாடி’ என்ற ஸ்பானிஷ் படத்தின் ரீமேக் ஆக உருவாக உள்ளது.
இந்தப் படத்தில் இம்ரான்ஹஷ்மி, ரிஷி கபூர் நடிக்க உள்ளார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கெனவே ஆரம்பமாகிவிட்டது. ஹிந்திப் படத்தில் அறிமுகமாவது குறித்து வேதிகா கூறுகையில், “ஹிந்திப பட உலகில் நுழைவதற்கு நல்ல வாய்ப்பை எதிர்பார்திருந்தேன், இப்பொழுது இந்த வாய்ப்பு கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி,” எனறார.
விரைவில் இதற்கான படப்பிடிப்பில் வேதிகா கலந்து கொள்ள உள்ளார்.