கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங் நடிக்கும் ‘தேவ்’

பிரின்ஸ் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் ரஜத் ரவிசங்கர் இயக்கத்தில் கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங்க நடிக்க தயாராகிக் கொண்டிருக்கும் படத்திற்கு ‘தேவ்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

கார்த்தியின் அண்ணன் நடிகர் சூர்யாவின் மகன் பெயர் தேவ் என்பது குறிப்பிடத்தக்கது.

‘கடைக்குட்டி சிங்கம்’ திரைப்படத்தைத் தொடர்ந்து கார்த்தி நடிப்பில் இப்படம் உருவாகி வருகிறது.

சூர்யா நடித்த ‘சிங்கம் 2’ படத்திற்குப் பிறகு த்ரிஷா நடித்துள்ள ‘மோகினி’ படத்தைத் தயாரித்துள்ள பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ். லட்சுமண் இப்படத்தை 55 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமாகத் தயாரித்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் ஹைதராபாத்தில் ஆரம்பமானது. விறுவிறுப்பான கார் சேசிங் மற்றும் பாடல் காட்சிகள் இங்கே படமாக்கப்பட உள்ளன. அதிரடி சண்டைக் காட்சிகள் இமாலய மலைகளிலும் , மும்பை மற்றும் ஐரோப்பாவிலும் படமாக்கப்பட உள்ளன. மேலும் அமெரிக்காவிலும் படமாக உள்ளது.

ரகுல் ப்ரீத் சிங், பிரகாஷ் ராஜ், ரம்யா கிருஷ்ணன், அம்ருதா, விக்னேஷ், டெம்பர் ( தெலுங்கு ) வில்லன் வம்சி ரவி ஆகியோருடன் சிறப்பு வேடத்தில் கார்த்திக் நடிக்கிறார்.

ஹாரிஸ் ஜெயராஜ் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

Read Previous

ஹிந்திப் படத்தில் அறிமுகமாகும் வேதிகா

Read Next

இளையராஜாவுக்கு தமிழில் வாழ்த்து சொன்ன குடியரசுத் தலைவர்

Most Popular