‘சிங்கம் 2’ அடுத்த மாதம் வெளியீடு….

singam 2_00012பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஹரி இயக்கத்தில் தேவிஸ்ரீபிரசாத் இசையமைப்பில் சூர்யா, அனுஷ்கா, ஹன்சிகா, சந்தானம், விவேக் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘சிங்கம் 2’.

சூப்பர் ஹிட்டாக ஓடிய ‘சிங்கம்’ படத்தின் இரண்டாம் பாகமாக வெளிவர இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தென்னிந்தியாவில் ஆரம்பமாகி, தென்னாப்பிரிக்கா வரை நடைபெற்று முடிந்து, தற்போது இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

தேவிஸ்ரீபிரசாத் இசையில் ‘சிங்கம்’ படத்தின் பாடல்கள் சூப்பர் ஹிட் ஆனதைப் போல் இப்படத்தின் பாடல்களும் சூப்பர் ஹிட்டாகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே உள்ளது.

‘சிங்கம் 2’ படத்தின் இசை வெளியீடு ஜுன் 1ம் தேதியன்றும், அதைத் தொடர்ந்து ஜுன் இரண்டாவது வாரத்தில் படமும் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விரைவில் மற்ற விவரங்கள்…

Read Previous

மீண்டும் படம் இயக்கும் அர்ஜுன்…

Read Next

‘மகாசேன்’ புயல் திசை மாறியது…

Most Popular