ஸ்ரீகாந்த், சந்தானம், சுனைனா நடிக்கும் ‘நம்பியார்’

nambiarகோல்டன் ஃப்ரைடே ஃபில்ம்ஸ் தயாரிப்பில்  ஸ்ரீகாந்த் – சந்தானம் -சுனைனா நடிக்க  கணேஷா இயக்கும் புதிய படத்திற்கு ‘நம்பியார்’ என்று பெயரிட்டுள்ளனர்.

“நண்பன், பாகன்“ என  ஸ்ரீகாந்திற்கு மீண்டும் கிடைத்திருக்கும் நல்ல ரூட்டில் அடுத்த படமாக ஷூட்டிங்கில் இருப்பது ‘ஓம் சாந்தி ஓம்’. இதன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை அடைந்திருக்கும் வேளையில் அடுத்த படமாக ‘ நம்பியார் ’, அறிவியல் களம் சார்ந்த முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகிறது நம்பியார்.

ஸ்ரீகாந்த் இதை தனது கனவுப் படம் என்றே குறிப்பிடுகிறார். தலைப்பு மிகப்பெரிய ஜாம்பவானின் பெயராச்சே, பிரச்சனையை உருவாக்கிவிடக்கூடாது என  நம்பியார் அவர்களின் மகன் திரு. மோகன் நம்பியார் அவர்களை அணுகியபோது, ” நீங்கள் தாராளமாக வைத்துக்கொள்ளுங்கள் என அனுமதி கொடுத்ததோடு தனது வாழ்த்தையும் ஸ்ரீகாந்திற்கு தெரிவித்தார்.

“எங்கள்   படக்குழு அவருக்கும் அவர்தம் குடும்பத்திற்கும்  உண்மையிலே நன்றிக்கடன் பட்டுள்ளது. எம்ஜிஆர் அவர்களின் மிக ராசியான வில்லன் அவர். முதலில் நம்பியாரை புக் பண்ணிவிட்டீர்களா என்று கேட்பாராம் மக்கள் திலகம். இந்த படத்தின் கதைக்கும் நம்பியார் என்ற தலைப்புக்கும் மிகப்பெரிய தொடர்பு இருக்கும். படம் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்,” என்கிறார் ஸ்ரீகாந்த்.

நம்பியார் படத்துக்கு இன்னொரு பலம் சந்தானம். கதையைக் கேட்ட மாத்திரத்தில் அவ்வளவு பிஸியான நேரத்திலும் அதிக பட்ச தேதிகளை ஒட்டு மொத்தமாக வழங்கியிருக்கிறார். படத்தின் இன்னொரு ஹீரோவாகத்தான் நடிக்கிறார் சந்தானம். சுனைனா ஹீரோயினாக நடிக்கிறார்.

ஜெயப்பிரகாஷ், சுப்பு, ஜான் விஜய், தேவதர்ஷினி,  ஸ்ரீரஞ்சனி என நடிப்புப் பட்டாளமும்  உண்டு.

காமெராவை எம்.எஸ்.பிரபு கையாள, விவேக் ஹர்ஷா எடிட்டிங் செய்கிறார். திலீப் சுப்பாராயன் சண்டை பயிற்சி அமைக்க, தயாரிப்பு நிர்வாகம் செய்கிறார் சின்னதுரை. தயாரிப்பு வடிவமைப்பு – விமல்.

பிரபல இயக்குனர் ராஜ மௌலியின் கதை   இலாகாவில் பணிபுரிந்த கணேஷா இயக்குகிறார். படம் முழுக்க முழுக்க காமெடி கலந்த சயின்ஸ்  பிக்சன் படம்.

நடிப்பு மற்றும் பெரிய படங்களுக்கு இசை என பிஸியாக இருப்பதாக முதலில் மறுத்த விஜய் ஆண்டனி பின்னர், கதைக்கான களம் பார்த்தவுடன் தானே இசையமைக்கிறேன் என ஒப்புக்கொண்டு இப்போது இப்படத்தின்  கம்போசிங்கில்  இருக்கிறார் .

 விரைவில் படப்பிடிப்பு ஆரம்பமாகிறது.

Read Previous

தமிழ்நாட்டில் 25 புதிய தாலுகாக்கள் – முதல்வர் அறிவிப்பு

Read Next

‘தெனாலிராமன்’ படத்திற்காகப் பாடினார் வடிவேலு…

Most Popular