இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு இப்போதுதான் வடிவேலு ஒவ்வொரு படமாக நடிக்க ஆரம்பித்திருக்கிறார்.
அவற்றில் ஒரு படம் ‘தெனாலிராமன்’. யுவராஜ் இயக்கும் இந்த படத்திற்கு இசை டி. இமான். இவரது இசையமைப்பில் சமீபத்தில் இப்படத்திற்காக பாடல் ஒன்றை பாடியுள்ளார் வடிவேலு. இத் தகவலை இசையமைப்பாளர் இமானே தெரிவித்துள்ளார்.
யுவராஜ், கிரிக்கெட் வீரர் சடகோபன் ரமேஷ் நடித்த ‘போட்டா போட்டி’ படத்தை இயக்கியவர்.
‘தெனாலிராமன்’ படம் முழுக்க முழுக்க நகைச்சுவையை மையமாகக் கொண்டு உருவாகும் படம். ‘இம்சை அரசன் 23ம் புலிகேசி’ போல மீண்டும் ஒரு முழுமையான நகைச்சுவை அம்சம் கொண்ட வெற்றிப் படத்தில் நடிக்க வேண்டும் என்பதற்காகத்தான் வடிவேலு பொறுமையாக காத்திருந்தார் என்று கோடம்பாக்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எப்படியோ….வடிவேலு…வந்துட்டாருய்யா…வந்துட்டாரு….