ஃபேஸ்புக் ‘கடலை’ பற்றி ஒரு பாடல்…

jk_00011ந்த காலத்துல இருந்து இந்த காலம் வரைக்கும் ‘கடலை’ போடறது இருந்துட்டுதான் இருக்கு. ஆனால், எப்படி போடறாங்கன்றதுதான் காலத்துக்கேத்தபடி மாறிக்கிட்டேயிருக்கு.

இப்ப ‘ஃபேஸ்புக்’, ‘ஸ்கைப்’ இப்படி வீட்டை விட்டு வெளிய போகாமலே ‘கடலை’ போடறது நடக்குது. இதப் பார்த்து நம்ம சினிமா ஆட்கள் சும்மா இருப்பாங்களா.

அறிவியலையும், தமிழையும் கலந்து கட்டி அடிக்கும் மதன் கார்க்கி இதை ஒரு பாட்டாவே எழுதிட்டாரு.

சேரன் இயக்கத்தில் சர்வானந்த், நித்யா மேனன் நடிக்கும் ‘ஜே கே எனும் நண்பனின் வாழ்க்கை’  படத்துல ‘ஹே…ஃபேஸ்புக் லாகின் பண்ணு….’ என ஒரு பாடலை எழுதியிருக்கிறார். இப்படத்தின் இசயைமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ்குமார், மேகா பாடியுள்ள இப்பாடலில் சர்வானந்த், அவானா, மேக்னா என இரு மும்பை அழகிகளுடன் நடனமாடியுள்ளார்.

இன்றைய இளம் ரசிகர்களுக்கேற்ப இப்பாடலை காயத்ரி ரகுராம் நடனம் அமைத்துள்ளார். ஒளிப்பதிவாளர் சித்தார்த், கலை இயக்குனர் ல்வகுமார், ‘விஸ்வரூபம்’ படத்தில் பணியாற்றிய மதுசூதனன் கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தில் அவருடைடய பங்கை அளித்துள்ளார்.

அடுத்த மாதம் இப்படம் திரைக்கு வரும் எனத் தெரிகிறது.

Read Previous

விஜய் சேதுபதி நடிக்கும் ‘ரம்மி’

Read Next

24ம் தேதி ‘கல்யாண சமையல் சாதம்’ ஒரு பாடல் ரிலீஸ்…