24ம் தேதி ‘கல்யாண சமையல் சாதம்’ ஒரு பாடல் ரிலீஸ்…

kalyana samaiyal sadham_00008எவரெஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் புரொடக்ஷன் சார்பாக ‘அச்சமுண்டு அச்சமுண்டு’ திரைப்படத்தின் தயாரிப்பாளர் – இயக்குனர் கூட்டணி ஆனந்த் கோவிந்தன் – அருண் வைத்யநாதன் தயாரிக்க, புதுமுக இயக்குனர் ஆர் எஸ் பிரசன்னா இயக்க, பிரசன்னா,  லேகா வாஷிங்டன் நடிப்பில்  ‘கல்யாண சமையல் சாதம்’ விறுவிறுப்பாய் தயாராகி வருகிறது.

முழுக்க முழுக்க நகைச்சுவை கலந்த காதல் கதையாக உருவாகி வரும் இத்திரைப்படம், பெற்றோர் பார்த்து வைக்கும் திருமணம், இணையத்தின் மூலம் தேடப்படும் வரன்கள், திருமண ஏற்பாடுகளில் நடக்கும் கலாட்டாக்கள் என்று சுவை மிக்க காட்சிகளோடு, இக்கால இளைஞர்களை வசீகரிக்கும் வகையிலும் எடுக்கப்பட்டு வருகிறது.

இப்படத்தின் இயக்குனர் ஆர்.எஸ். பிரசன்னா, எல்.வி. பிரசாத் அகாடெமியில் படித்து, இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான், இயக்குனர் சிகரம் பாலசந்தரின் பொற்கரங்களால் தங்க விருது பெற்றவராவார். இவரது குறும்படங்களின் மூலம் பெர்லின்  மற்றும் பூசன் திரைப்பட விழாக்களில் பங்கு பெற்றுள்ளார்.

‘விஸ்வரூபம்’ படத்தை ‘ஆரோ 3டி’ எனும் புதிய தொழில் நுட்பத்தில் ஒலிச் சேர்க்கை செய்த குணால் ராஜன், ‘கல்யாண சமையல் சாதம்’ படத்தினை அமெரிக்காவின் புகழ் பெற்ற வார்னர் பிரதர்ஸ் ஸ்டூடியோவில் ஒலிச்சேர்க்கை செய்ய உள்ளார்.

அல்போன்ஸ் ராயிடம் உதவி ஒளிப்பதிவாளராக பணியாற்றி, பல இந்தி 3டி படங்களில் பணியாற்றிய கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகிறார். சத்யராஜ் படத்தொகுப்பை கவனிக்க, ஆறுச்சாமி கலையைக் கையாள்கிறார்.

இத்திரைப்படத்தில் அரோரா எனும் புதிய இசையமைப்பாளர் அறிமுகமாகிறார். இவர் பல புகழ் பெற்ற இசையமைப்பாளர்களிடமும், உலக இசை விழாக்களிலும் புல்லாங்குழல் வாசித்து பலரின் ஏகோபித்த பாராட்டைப் பெற்றவராவார்.

ஐந்து பாடல்கள் இடம்பெற்றிருக்கும் இத்திரைப்படத்தில் இருந்து, ‘மெல்ல சிரித்தாய்’ எனும் ஒரு பாடலை மட்டும் வரும் வெள்ளி மே 24 வெளியிடப்பட இருக்கிறது. “பீட்சா, சூது கவ்வும், நேரம்” போன்ற பல வெற்றிப்படங்களின் பாடல்களை வாங்கிய திங்க் மியூசிக் நிறுவனம் ‘கல்யாண சமையல் சாதம்’ படத்தின் பாடல் உரிமையை வாங்கியுள்ளது.

Read Previous

ஃபேஸ்புக் ‘கடலை’ பற்றி ஒரு பாடல்…

Read Next

கோயில், குளம் சுற்றும் சிம்பு…