விஜய் சேதுபதி நடிக்கும் ‘ரம்மி’

rummy_00001தொடர்ந்து வெற்றிப் படங்களாக கொடுத்து வரும் விஜய் சேதுபதி தற்போது நடித்து வரும் படங்களுள் ஒன்று ‘ரம்மி’.

ஸ்ரீ வள்ளி பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பாக கே. குருநாதன், பி. ஏலப்பன், எம். தர்மராஜன், பாலகிருஷ்ணன் .கே ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படம் இது.

இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, இனிகோ பிரபாகர் இருவரும் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள்.கதாநயாகிகளாக காயத்ரி, ஐஸ்வர்யா இருவரும் நடிக்கிறார்கள். முக்கிய வேடத்தில் சூரி நடிக்கிறார்.

மற்றும் ஜோமல்லூரி, ராஜா, சஞ்சய், மூணார் ரமேஷ், சுஜாதா, ஜானகி, பசங்க சிவகுமார், பேபி, சென்ட்ராயன், விக்னேஷ், கடல் சரண் ஆகியோர் நடிக்கிறார்கள். டி. இமான் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

“ரம்மி“ சுவாரசியமான கதை, ரம்மி சுவாரசியமான ஆட்டமும் கூட. நம்மோட வாழ்க்கை நம்மை வச்சி எப்படி விளையாடுதுங்கிறதுதான் ரம்மி.

நாம ஒரு திசையை நோக்கிப் பயணிக்க நினைச்சா, வாழ்க்கை நம்மை வேற ஒரு இடத்துக்கு இழுத்துட்டுப் போகும். அப்படி போகிற போது நடக்கிற சம்பவங்கள்தான் “ரம்மி”.

விஜய் சேதுபதி, இனிகோ பிரபாகர், சூரி ஆகிய மூன்று பேரின் ஆழமான நட்பு, மற்றும் காதலை அழகாக பதிவு செய்கிற படம்தான் “ரம்மி”,” என்கிறார் படத்தின் இயக்குனர் பாலகிருஷ்ணன் .கே

Read Previous

இரட்டிப்பு மகிழ்ச்சியில் ஷாம்…

Read Next

ஃபேஸ்புக் ‘கடலை’ பற்றி ஒரு பாடல்…