சுந்தர் . சி இயக்கத்தில் சத்யா இசையமைப்பில் சித்தார்த், ஹன்சிகா, சந்தானம் நடிக்கும் ‘தீயா வேலை செய்யணும் குமாரு’ படத்திற்கு ‘யு’ சர்டிபிகேட் கிடைத்துள்ளது.
‘கலகலப்பு’ படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு சுந்தர் .சி இயக்கியுள்ள படம் இது. சுந்தர் . சி இயக்கத்தில் முதன் முறையாக சித்தார்த்தும், ஹன்சிகாவும் நடித்துள்ளார்கள்.
கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர் நிறுவனத்தில் பணி புரியும் சித்தார்த்துக்கும், ஹன்சிகாவுக்கும் இடையே ஏற்படும் காதலைப் பற்றிய இந்த கதையில் சந்தானத்தின் காமெடி வழக்கம் போலவே ஹைலைட்டாகப் பேசப்படும் விதத்தில் அமைந்துள்ளது.
ஜுன் மாதம் 14ம் தேதி இப்படம் வெளியாகிறது.