‘கடல்’ படத்தில் அறிமுகமான நடிகர் கார்த்திக்கின் மகன் கௌதம் கார்த்திக் தற்போது மூன்று படங்களில் நடித்து வருகிறார். அவற்றில் ஒரு படத்தை ரவிபிரசாத் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
தெலுங்கில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற ‘அலா மொதலந்தி’ என் படத்தின் ரீமேக்தான் இந்த படம்.
கௌதம் கார்த்திக் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக ராகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார். இவர் ‘புத்தகம்’ திரைப்படத்தில் நாயகியாக நடித்தவர்.
ரவி தியாகராஜன் இயக்கும் இந்த படத்திற்கு டி. இமான் இசையமைக்க மதன் கார்க்கி பாடல்களை எழுதுகிறார். ரவி பிரசாத் புரொடக்ஷன்ஸ் சார்பாக ரவிகுமார் தயாரிக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் ஆரம்பமாகிறது.