‘ஆரம்பம்’ ஒரு அதிரடிஆக்‌ஷன் படம் – விஷ்ணுவர்த்தன்

arrambam_00001ஜித் நடித்த ‘பில்லா’ படத்தின் மூலம் ஒரு புதுமையான மேக்கிங் ஸ்டைலை உருவாக்கிய இயக்குனர் விஷ்ணுவர்த்தன் மீண்டும் அஜித் நாயகனாக நடிக்கும் ‘ஆரம்பம்’ படத்தை இயக்கி வருகிறார்.

படத்தைப் பற்றி அவரிடம் கேட்ட போது,

“ஆரம்பம்’  என்ற தலைப்பு எல்லோரையும்   கவர்ந்துள்ளது . இந்த தலைப்புக்கான தாமதம் திட்டமிடப்பட்டது அல்ல. ஆனால் இந்த வரவேற்பு கிடைக்க அந்த தாமதமும் ஒரு காரணம் என்பதும் மகிழ்ச்சிக்குரிய விஷயம்தான் .
இது ஒரு  போராட்ட குணமுள்ள ஒரு தனி மனிதனின் கதை. கதையில் வரும் மற்ற கதாபாத்திரங்கள் அந்த பிரதான சூரியனை சுற்றி வரும் கோள்கள்தான்.
இந்த படத்திலும் அஜீத் சார் ‘மங்காத்தா’  படம் போலவே நரை கலந்த தலை முடியுடன் தான் நடிக்கிறார் . அந்த படத்துக்கு முன்னரே அவரிடம் என் படத்துக்கு இந்த கெட் அப்பில்  தான்  வேண்டும் என்று கேட்டிருந்தேன் , ஆனால் வெங்கட்பிரபு முந்திக் கொண்டார் .
இந்த style  அவர் அளவுக்கு வேறு யாருக்காவாவது அமைந்து இருக்குமா என்றால் சந்தேகமே .இது ஒரு Action drama…விறுவிறுப்பான வேகமான படம் .
எங்களது கூட்டணியில் உருவான ‘ பில்லா’ படத்தை விட  பல மடங்கு வேகமாக இருக்கும் , அஜீத் ரசிகர்களை மட்டுமின்றி எல்லா தரப்பு ரசிகர்களையும் கவரும் படமாக இருக்கும் என்பது நிச்சயம் ” என்று  நம்பிக்கை தெரிவித்தார் விஷ்ணுவர்த்தன்.

Read Previous

நலமுடன் இருக்கிறேன் – கனகா

Read Next

இமான் இசையில் பாடிய ஸ்ருதி ஹாசன்

Most Popular