நடிகை ஸ்ருதி ஹாசன் ஒரு பின்னணிப் பாடகியும் கூட என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.
நடிப்பில் பிஸியானதும் அவர் பின்னணி பாடுவதை குறைத்துக் கொண்டார்.
இந்நிலையில் தற்போது இமான் இசையமைப்பில் ஒரு பாடலைப் பாடியிருக்கிறார்.
ரவி பிரசாத் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், ரவி தியாகராஜன் இயக்கத்தில் , கௌதம் கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தில் இமான் இசையில் அந்த பாடலைப் பாடினார் ஸ்ருதி ஹாசன்.
அப்பாடல் மத்திய கிழக்கு இசைப் பாடல் என இசையமைப்பாளர் இமான் குறிப்பிட்டுள்ளார்.