லிங்குசாமி இயக்கத்தில் மாதவன், ஆர்யா, சமீரா ரெட்டி, அமலா பால் நடித்து 2011ம் ஆண்டு வெளிவந்த ‘வேட்டை’ திரைப்படம் விரைவில் ஹிந்தியில் தயாராக இருக்கிறது.
இப்படத்தை ஹிந்தித் திரையுலகின் பிரபல இயக்குனரான கரண் ஜோஹர் தயாரிக்கவிருக்கிறார். நட்சத்திரங்கள் இன்னும் முடிவாகவில்லை.
‘வேட்டை’ திரைப்படம் தெலுங்கில் ‘தட்கா’ என்ற பெயரில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. இப்போது ஹிந்தியிலும் மாபெரும் வெற்றி பெறும் விதத்தில் தயாரிக்கப்படும் என்று தெரிகறது.
கரண் ஜோஹர் பல வெற்றிப் படங்களை இயக்கியவர் என்பதால் அவர் இந்த படத்தை தமிழ், தெலுங்கில் வெற்றி பெற்றது போல் வெற்றிப் படமாக்குவார் என்று பாலிவுட் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.