மிஷ்கின் இயக்கத்தில் இளையராஜா இசையமைத்து வெளிவந்துள்ள ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ படத்திற்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
வழக்கமான மசாலாப் படங்களிலிருந்து மாறுபட்டு வித்தியாசமான படமாக வெளிவந்துள்ள இப்படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகத்தைச் சேர்ந்த பலரும் பாராட்டு தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
பாடல்களோ, ஹீரோயினோ, பகல் காட்சிகளோ இல்லாமல் இருட்டில் மட்டுமே கதை நகரும் இந்த படத்தை சமீப கால தமிழ் சினிமாவில் சிறந்த படம் என ரசிகர்களை பாராட்டுகின்றனர்.
ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களிலும் படத்தை பார்த்தவர்கள் பாராட்டி ‘ஸ்டேட்டஸ்’ போட்டு வருகின்றனர்.
ஒட்டு மொத்தமாக அனைவரும் பாராட்டும் படமாக ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ அமைந்து விட்டது.