இரண்டாம் உலகம் – ஹங்கேரியில் ரீ-ரிக்கார்டிங்

irandam ulagamசெல்வராகவன் இயக்கத்தில் ஆர்யா, அனுஷ்கா நடித்துள்ள ‘இரண்டாம் உலகம்’ படத்திற்கு ஹங்கேரியில் உள்ள புடாபெஸ்ட் நகரத்தில் ‘சிம்பொனி’  இசை அமைக்கப்படுகிறது.

இதற்காக இப்படத்திற்கு பின்னணி இசை மட்டும் அமைக்கும் அனிருத், இயக்குனர் செல்வராகவன் ஹங்கேரி புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

இந்த படத்திற்கு பின்னணி இசையமைக்க ஹாரிஸ் ஜெயராஜ், தாமதப்படுத்துவதால் அவருக்குப் பதிலாக அனிருத் அந்த பணியை ஏற்றுள்ளார்.

ஆனால், ஹாரிஸ் தரப்பிலிருந்து ஏற்கெனவே இசையமைக்க ஒத்துக் கொண்ட பல படங்களின் வேலை இருப்பதால், இப்படத்தின் பின்னணி இசையமைப்பிலிருந்து விலகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எப்படியோ ஒரு படத்திலேயே இளைஞர்களின் மனம் கவர்ந்த இருவர், ‘இரண்டாம் உலகம்’ படத்திற்கு இசையமைப்பது இனிமையானதுதான்.

Read Previous

அனைவரும் பாராட்டும் ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’

Read Next

ரசிகர்களை மகிழ்விக்க வேண்டும் – அனுஷ்கா

Most Popular