ராஜா ராணி – 3 நாளில் 12 கோடி வசூல்

raja rani 2_00010ஆர்யா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா, சந்தானம், சத்யராஜ் மற்றும் பலர் நடித்த ‘ராஜா ராணி’ திரைப்படம் மூன்றே நாளில் சுமார் 12 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக கோடம்பாக்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த வெள்ளி 27ம் தேதியன்று வெளியான இத் திரைப்படம் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களில் மட்டும் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் 12 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.

இப்படம் ரிலீசான நாளிலிருநதே பல திரையரங்குகளில் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது.

ஆர்யா – நயன்தாரா இணைந்து நடித்துள்ளதும், காதல், சென்டிமென்ட், காமெடி என அனைத்தும் சரியான விகிதத்தில் கலந்து இப்படம் எடுக்கப்பட்டுள்ளதால் அனைத்து ரசிகர்களையும் கவர்ந்துள்ளதாக வியாபார நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

சீக்கிரமே நாளிதழ்களில் “வசூல் ராஜா – ராணி” என விளம்பரங்களை எதிர்பார்க்கலாம்…

Read Previous

ஓர் குடையின் கீழ் அழகின் சங்கமம் ‘ஸ்ரீ ஸ்ருங்கர்’

Read Next

அனைவரும் பாராட்டும் ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’