‘தனி ஒருவன்’ படத்தில் மூலம் தமிழ்த் திரையுலகத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தனக்கென தனி இடத்தைப் பிடித்துள்ளவர் அரவிந்த்சாமி.
தற்போது மணிரத்னம் இயக்கத்தில் “செக்கச் சிவந்த வானம்’, மற்றும் ‘சதுரங்க வேட்டை 2, நரகாசூரன், வணங்காமுடி’ ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார்.
இந்தப் படங்களுக்குப் பிறகு “என்னமோ நடக்குது, அச்சமின்றி” ஆகிய படங்களை இயக்கிய ராஜபாண்டி இயக்கும் புதிய படம் ஒன்றில் அரவிந்த்சாமி நடிக்க உள்ளார்.
வித்தியாசமான கதைக்களம் கொண்ட இந்தப் படத்தின் மற்ற நட்சத்திரங்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், தயாரிக்கும் நிறுவனம் ஆகியவை பற்றிய விவரங்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளன.