லாபிரிந்த் பிலிம்ஸ் சார்பில் மஞ்சுளா பீதா தயாரிக்க, மனோஜ் பீதா இயக்கத்தில் உருவாகி வரும் ‘வஞ்சகர் உலகம்’ படத்தின் நாயகியாக அனிஷா அம்புரோஸ் நடித்துள்ளார்.
சிபி புவன சந்திரன், ஹரேஷ் பெரடி, குரு சோமசுந்தரம், சாந்தினி தமிழரசன், விஷாகன் வணங்காமுடி, ஜான் விஜய் மற்றும் வாசு விக்ரம் ஆகியோர் இப் படத்தில் முக்கிய பாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்துள்ள அனிஷா ‘இடம் பொருள் ஆவி’ என்ற தமிழ்ப் படத்தில் இதற்கு முன் நடித்துள்ளார்.
வஞ்சகர் உலகம் படம் பற்றி அவர் கூறியதாவது,
“செய்தி சேகரிக்கும் போது ஒரு கொடூரமான சூழ்நிலையில் மாட்டிக் கொள்ளும் சம்யுக்தா என்ற பத்திரிகையாளரின் பாத்திரத்தில் நடிக்கிறேன். அதிலிருந்து அவள் மீண்டு வந்தாளா என்பதுதான் என் கதாபாத்திரம். இப்படத்தின் திரைக்கதை ஹைப்பர்லிங்க் பாணியில் அமைக்கப்பட்டுள்ளது. எனவே இது ஒரே நேரத்தில் நடக்கும் பல்வேறு கதைகள், அதன் கதாபாத்திரங்களை கொண்ட படமாக உருவாகியிருக்கிறது.
இது ஒரு வழக்கமான கேங்க்ஸ்டர் படம் இல்லை என நான் உறுதியளிக்கிறேன். ஸ்கைப் மூலம் எனக்கு ஸ்கிரிப்டை விளக்கினார் இயக்குனர் மனோஜ். கதை மிகவும் சிறப்பாக இருந்தது. தவிர, என் முந்தைய படங்களை அவர் பார்த்திருப்பாரா ? என எனக்கு ஆச்சரியமாக இருந்தது. பின்னர், நான் அந்த பாத்திரத்திற்காக பரிசீலிக்கபட்டேன். நாங்கள் படப்பிடிப்பை ஆரம்பித்தபோது, எல்லாம் சரியாக அமைந்தது. படப்பிடிப்பில் ஒவ்வொரு நாளும் படம் சிறப்பாக வந்து கொண்டிருந்தது மகிழ்ச்சி அளித்தது,” என்கிறார்.
‘வஞ்சகர் உலகம்’ விரைவில் திரைக்கு வருகிறது.