சூர்யா படத்தில் அல்லு சிரிஷ் பதிலாக ஆர்யா ?

‘அயன், மாற்றான்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து இயக்குனர் கே.வி.ஆனந்த், சூர்யா கூட்டணி மீண்டும் இணைந்துள்ள படத்தின் படப்பிடிப்பு தற்போது லண்டனில் நடைபெற்று வருகிறது.

லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது. இந்தப் படத்தில் சூர்யா தான் நாயகன். இருந்தாலும், மலையாள நடிகர் மோகன்லால், தெலுங்கு நடிகர் அல்லு சிரிஷ் ஆகியோர் ஏற்கெனவே ஒப்பந்தம் ஆனார்கள். தற்போது மேலும் ஒரு நடிகராக தமிழ் நடிகர் ஆர்யா இந்தப் படத்தில் இணைந்துள்ளார்.

இதனிடையே, இந்தப் படத்தில் அல்லு சிரிஷ் நடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால்தான் ஆர்யா அவருக்குப் பதிலாக நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார் என்ற ஒரு தகவலும் வெளியாகியுள்ளது.

ஆர்யா கைவசம் தற்போது எந்த தமிழ்ப் படமும் இல்லாததால் அவருடம் உடனே நடிக்க சம்மதம் தெரிவித்துவிட்டார் என்கிறார்கள்.

இருப்பினும், அல்லு சிரிஷுக்குப் பதிலாகத்தான் ஆர்யா நடிக்கிறார் என்று எந்த அதிகாரப்பூர்வத் தகவலும் வெளியிடப்படவில்லை.

Read Previous

‘மிஸ்டர் சந்திரமௌலி’ – ரசிகர்களுக்கான பொழுதுபோக்குப் படம்

Read Next

மிஸ்டர் சந்திரமௌலி – அனைத்து வீடியோக்கள்