மிஸ்டர் சந்திரமௌலி – 500க்கும் அதிகமான தியேட்டர்களில்…

போப்டா மீடியா ஒர்க்ஸ், கிரியேட்டிவ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் திரு இயக்கத்தில் சாம் சிஎஸ் இசையமைப்பில், கௌதம் கார்த்திக், ரெஜினா, கார்த்திக், வரலட்சுமி, சதீஷ் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள ‘மிஸ்டர் சந்திரமௌலி’ இன்று வெளியாகிறது.

தமிழ்நாட்டில் 300க்கும் மேற்பட்ட தியேட்டர்களிலும், வெளிநாடுகளில் 200க்கும் மேற்பட்ட தியேட்டர்களிலும் இப்படம் வெளியாகிறது.

போட்டிக்கு வேறு எந்த பெரிய படங்களும் இல்லாததால், ‘மிஸ்டர் சந்திரமௌலி’ படம் இந்த வாரத்திற்கான ரசிகர்களின் என்டர்டெயின்மென்ட்டாக இருக்கப் போகிறது.

இளமை, புதுமை, கிளாசிக் என அனைத்து விதமான ரசிகர்களையும் கவரும் விதத்தில் இந்தப் படம் உருவாகியுள்ளது.

சாம் சிஎஸ் இசையில் பாடல்களும், ரிச்சர்ட் எம் நாதனின் ஒளிப்பதிவும் இந்தப் படத்தில் பெரிதும் பேசப்படும்.

நேற்று இப்படத்திற்கான பத்திரிகையாளர் காட்சி நடைபெற்றது. இளம் ரசிகர்கள் மட்டுமல்லாது, குடும்பத்தினருடன் பார்க்கும்படியான படமாக இந்தப் படம் இருக்கிறது என பலரும் பாராட்டியுள்ளனர்.

படத்திற்கான முன்பதிவும் சிறப்பாக இருப்பதாக தயாரிப்பு நிறுவனம் தரப்பில் தெரிவிக்கிறார்கள்.

Read Previous

‘களவாணி சிறுக்கி’ – ஈரோட்டில் நடந்த இசை வெளியீடு

Read Next

மலேசியத் திரைப்படங்கள் நிறைய வரவேண்டும் – நாசர்