லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘2.0’.
இப்படத்தின் வெளியீட்டுத் தேதி இந்த வருடம் நவம்பர் 29ம் தேதி என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
படத்தின் கிராபிக்ஸ் பணிகள் தாமதம் ஆனதைத் தொடர்ந்து இப்படத்தின் வெளியீடு பற்றிய எந்தத் தகவலும் வெளியாகாமல் இருந்தது.
இந்நிலையில் சற்று முன் இப்படத்தின் வெளியீட்டுத் தேதியை திடீரென அறிவித்துள்ளார்கள்.
இந்த வருட தீபாவளி நவம்பர் 6ம் தேதி வருகிறது. ஆனால், படத்தை தீபாவளியை முன்னிட்டு வெளியிடாமல் அதன் பின்னரே வெளியிடுகிறார்கள்.
பட வெளியீடு பற்றி இயக்குனர் ஷங்கர், “கடைசியாக விஎப்எக்ஸ் கம்பெனிகள் விஎப்எக்ஸ் காட்சிகளை எப்போது தருவார்கள் என்பதைப் பற்றி சத்தியம் செய்துவிட்டார்கள். படம் 29 நவம்பர் 2018 அன்று வெளியாகிறது,” எனக் கூறியுள்ளார்.
With Great Pride and Immense Excitement announcing the release date of our #MagnumOpus #2Point0 – 🔥 November 29Th, 2018. Gear up to view the Ultimate Clash 🔥 #GoodOrEvil #WhoDecides @shankarshanmugh @rajinikanth @akshaykumar @arrahman @iamAmyJackson #2Point0FromNov29 pic.twitter.com/RPpsUGXbjP
— Lyca Productions (@LycaProductions) July 10, 2018