எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ், ஒன்றாக என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரிக்க, கௌதம் மேனன் இயக்கத்தில் தர்புகா சிவா இசையமைப்பில் தனுஷ், மேகா ஆகாஷ் நடிக்கும் படம் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’.
இப்படத்தின் கடைசி கட்டப் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இதில் தற்போது இயக்குனரும், நடிகருமான சசிகுமார் கலந்து கொண்டு நடித்து வருகிறார். படத்தில் ‘திரு’ என்ற கதாபாத்திரத்தில் சசிகுமார் நடிக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு பல்வேறு காரணங்களால் தடைபட்டு நீண்டு கொண்டே வந்தது. ஏற்கெனவே, இப்படத்தின் பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
கௌதம் மேனன் இயக்க்ததில் தனுஷ் முதல் முறையாக நடிப்பதால், அவரது ரசிகர்களும் படம் எப்போது வெளிவரும் என்று காத்திருக்கிறார்கள்.
தற்போது நடந்து வரும் கடைசிகட்டப் படப்பிடிப்புடன் மொத்த படப்பிடிப்பும் முடிவடைகிறதாம். அதன்பின், இறுதிக் கட்டப் பணிகள் முடிந்ததும் படம் வெளியாகும் என்கிறார்கள்.
தனுஷ் நடித்துள்ள ‘வட சென்னை’ படத்திற்குப் பிறகு ‘மாரி 2’ வருமா அல்லது ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ வருமா என்பதுதான் கேள்வியே.
எப்படியிருப்பனும் தனுஷ் ரசிகர்களுக்கு அடுத்தடுத்து மூன்று முக்கிய படங்களை ரசிக்கும் வாய்ப்பு நிச்சயம் உண்டு.