எனக்கும் அந்த படத்திற்கும் தொடர்பில்லை – ஸ்ருதிஹாசன்

இன்றைய நாளிதழ்களில் ஸ்ருதிஹாசன் கலக்கும் ‘தாவூத்’ என்ற பெயரில் ஒரு படத்தின் விளம்பரம் வெளிவந்துள்ளது.

இன்று இசை வெளியீடு என்றும் அடுத்த மாதம் பிப்ரவரி 7ம் தேதி வெளியாகிறது என்றும் அந்த விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“இந்த படத்திற்கும் தனக்கும் எந்த சம்பந்தமில்லை. இப்போது அது பற்றி சட்ட யோசனைக்குட்பட்டுள்ளேன். விரைவில் இது பற்றிய தகவலை தெரிவிக்கிறேன், ” என ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு ஹிந்தியில் வெளியான ‘டி – டே’ என்ற படத்தின் தமிழ் மொழி மாற்றுப் படம்தான் இது.

அநேகமாக, ஸ்ருதிஹாசன் இந்த பட வெளியீட்டை சட்ட பூர்வமாக சந்திக்கலாம் எனத் தெரிகிறது.

Read Previous

அந்த ‘ஏரியா’வும் என்னோடது – சிவகார்த்திகேயன் அதிரடி…

Read Next

ஆதாரத்தோட நிரூபியுங்க…கோர்ட்டுக்குப் போங்க – விஜய் மில்டன் சவால்…