விஜய் மில்டன் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘கோலி சோடா’ படம் அனைத்து ரசிகர்களின் ஆதரவோடு வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
அதே சமயம், இந்த படத்தின் கதைக்குச் சொந்தக்காரர் விஜய் மில்டன் அல்ல , வேறொருவர் என சில வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகின.
சில நாட்களுக்கு முன்னரே இது பற்றி விஜய் மில்டன் அவருடைய ஃபேஸ்புக்கில் கருத்து தெரிவித்திருந்தார். தற்போது அவருடைய பதிலை ஒரு வீடியோவாகவும் வெளியிட்டிருக்கிறார்.
அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,
“ஆன்-லைன்’ல இந்த படத்துக்கு இவ்வளவு வரவேற்பு கிடைக்கும்னு எதிர்பார்க்கலை.
பாராட்டற எல்லாருமே நாங்க ஜெயிச்ச மாதிரி இருக்குன்னு சொல்றத கேக்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு.
ஆனால், கடந்த இரண்டு நாளா இந்த படத்தைப் பத்தி சில ‘டிஸ்புயூட்ஸ்’லாம் வந்திட்டிருக்கு. இந்த கதை அவரோடது, என்னோட, டைட்டில் என்னோடது, நான் ஏற்கெனவே பண்ணிட்டேன்னு சொல்றாங்க.
நான் ஒரு சின்ன ரிக்வெஸ்ட் மட்டும் வைக்கிறேன். நீங்க யாரா இருந்தாலும் சரி, உங்கிட்ட ஆதாரம் இருந்தால் தயவு செய்து அதை வெளிப்படுத்துங்க.
சம்பந்தப்பட்டவங்களைப் பேசச் சொல்லுங்க. இந்த ஸ்கிரிப்ட் வரிக்கு வரி எழுதிய காப்பி என்கிட்ட இருக்கு. இந்த கதைய வச்சிக்கிட்டு நான் எத்தனை வருஷமா அலைஞ்சிருக்கேன். 5 நாள் வேலை செஞ்சி, அப்புறம் அந்த பணத்தை வச்சி, சனி, ஞாயிறுல இந்த படத்தோட ஷுட்டிங் நடத்தியிருக்கன்.
ஒருத்தர் கதையைத் திருடி இன்னொருத்தர் படம் பண்ணி ஜெயிச்சிடவே முடியாது.
ஒரு கதை மாதிரி, இன்னொரு கதை வந்துடுச்சின்னா, அது நடக்கத்தான் செய்யும். அதுக்காக நான் வருத்தப்படக் கூடாது. இதெல்லாம் ‘பார்ட் ஆப்த கேம்’.
நீங்க சொல்றது உண்மைன்னு நம்புனீங்கன்னா, கோர்ட்டுக்குப் போங்க. போலீஸ் ஸ்டேஷன் போங்க. தயவு செய்து முதுகுக்குப் பின்னாடி எழுதறத நிறுத்துறங்க.
இன்னொருத்தரோட அடையாளத்தை வச்சி நான் படம் எடுத்திருந்தால் நான் மனுஷனே கிடையாது. அதே மாதிரி என் அடையாளத்தை யாராவது அழிக்கணும்னு நினைச்சால் நான் மனுஷனா இருக்க மாட்டேன்.
இது வந்து நியாயமான ஒரு பிலிம் மேக்கரோட கோபம்.
யாராவது நான் செஞ்சது தப்புன்னு நினைச்சீங்கன்னா, என் முகத்திரையை கிழியுங்கள். எக்ஸ்போஸ் பண்ணுங்கள்…என்கிட்ட எல்லா ஆதாரமும் இருக்கு. தயவு செஞ்சி பின்னாடி வந்து பழி போடாதீங்க.
ரிலீஸ் ஆனதுக்கப்புறம் இந்த படத்துக்கு கிடைச்ச ஆன்லைன் சப்போர்ட்தான் இந்த படத்துக்கான மரியாதையை கிரியேட் பண்ணி கொடுத்திச்சி, ரொம்ப நன்றி, ” என தெரிவித்துள்ளார்.
விஜய் மில்டன் வீடியோ பேட்டி….
