‘வாயுள்ள புள்ள பொழைச்சிக்கும்’னு சொல்வாங்க…அப்படி ஒரு விஷயத்தால டிவில வந்து சாதிச்சி, இன்னைக்கு சினிமாவுலயும் சாதிச்சிட்டிருக்காரு சிவகார்த்திகேயன்.
அதே சமயம் அவர் ‘கல்லா’ கட்டற திறமையைப் பார்த்து கோடம்பாக்கத்துல பல வருஷமா பணம் சம்பாதிக்க ஆளாப் பறக்கறவங்களையே ஆச்சரியப்பட வச்சிருக்காரு.
இப்போதைக்கு சிவாவோட சம்பளம் 5 கோடி ரூபாய்னு சொல்றாங்க. போன வருஷத்தோட டாப் கலெக்ஷன் ஹீரோங்கறதால அதுக்கு மேலயும் சம்பளம் கொடுக்க ஆட்கள் ரெடியா இருக்காங்கன்றது தனிக் கதை.
அந்த சம்பளத்தோட இப்ப புதுசா அவர் நடிக்கிற படத்தோட வெளிநாட்டு உரிமையையும் சேர்த்தே கொடுத்துடணும்னு கேக்கறாராம்.
அதுவும் ஒரு 5 கோடி வரைக்கும் போகும்னு சொல்றாங்க. இதெல்லாம் மட்டுமில்லாம, வர்ற லாபத்துல பங்கும் கேக்கறார்னு ஒரு தகவல்.
கூட்டிக் கழிச்சிப் பார்த்தால் இன்னைய தேதிக்கு விஜய், அஜித்துக்கு அடுத்து அதிகமா சம்பளம் வாங்கறது இவராதான் இருக்கும்னு மீடியேட்டர்கள் சொல்றாங்க.
‘காற்றுள்ள போதே தூற்றிக் கொள்’…ங்கற பழமொழிக்கேத்தபடி சிவகார்த்திகேயன் நடந்துக்கிட்டாலும், அவருக்கு இன்னொரு பழமொழியையும் ஞாபகப்படுத்தறங்க அவங்க…அது…
‘ஆடிக்காத்துல அம்மியும் பறந்துடும்…’…