தயாரிப்பாளர் சங்கத்தை காணவில்லை – தயாரிப்பாளர் குற்றச்சாட்டு

paakkanum pola irukku audio launch

எப்.சி.எஸ். கிரியேஷன்ஸ் சார்பில் துவார் ஜி.சந்திரசேகர் தயாரித்துள்ள படம் ‘பாக்கணும் போல இருக்கு’. எஸ்.பி..ராஜகுமார் இயக்கியுள்ளார். அருள் தேவ் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் பாடல்கள் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது.

இவ்விழாவில் பேசிய தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, “இங்கு சிறு முதலீட்டுப் படங்கள் வருவதுதான் சினிமாவின் வளர்ச்சி என்றார்கள். தயாரிப்பாளர் சந்திர சேகர் நிறைய படங்கள் எடுத்து வருவதாகவும் கூறினார்கள். நாங்கள் எடுக்கத் தயார்தான். புதியவர்கள் பலரையும் அறிமுகப் படுத்தவும் தயார்தான்.

ஆனால் வியாபார ரீதியாக பல பிரச்சினைகளை சந்திக்கிறோம். யாரிடம் சொல்வது? தயாரிப்பாளர் சங்கம் உதவுவதில்லை.  அதைக் காணவில்லை. முகவரி தேடி அலைந்து கொண்டிருக்கிறோம். இந்த நிலையில் ஊடகங்களை மட்டுமே நம்பி எடுக்கிறோம் .மற்றபடி எங்களுக் உதவ எந்த சங்கமும் வருவதில்லை. “என்று பேசினார்.

இயக்குநரும் ‘நாம் தமிழர்’ கட்சித் தலைவருமான சீமான் பேசும் போது

” பெரிய நிறுவனங்களுக்கு இல்லாத துணிச்சல் இந்த எப். சி.எஸ் கிரியேஷன்ஸ் துவார் சந்திரசேகருக்கு இருக்கிறது. முதலில் அவரைப் பாராட்டுகிறேன்.

இவர் எடுத்த முந்தைய படங்கள் வெற்றி பெறவில்லை என்றார்கள். தோல்வி சொன்னதாம் ‘என்னைச் சந்தித்து விட்டுப் போன எவரும் தோற்றதில்லை’ என்று. வெற்றி சிரித்து மகிழ வைக்கும்;தோல்வி சிந்தித்து ஜெயிக்க வைக்கும்,” என்றார்.

நிகழ்ச்சியில் நடிகர்கள் பரதன், தமன்,  விஜய் ஆனந்த், வின்சென்ட் அசோகன், கஞ்சாகருப்பு, பவர்ஸ்டார் சீனிவாசன், நடிகைகள் நமீதா, ஹன்சிபா, சஞ்சனா சிங், சுஜா, இயக்குநர்கள் சீனுராமசாமி,எஸ்.பி,ராஜ்குமார்,கேபிள் சங்கர்,ஏகாதசி, தயாரிப்பாளர் துவார் ஜி.சந்திரசேகர்,  இசையமைப்பாளர் அருள் தேவ், ஆகியோரும் பேசினார்கள்.

Read Previous

‘புறம்போக்கு‘ – பூரிப்பில் கார்த்திகா…

Read Next

மக்களுக்கான படத்தைத்தான் எடுத்திருக்கிறேன் – ‘அங்குசம்’ மனுக்கண்ணன்