‘கோ’ படத்தில் நடித்த கார்த்திகாவுக்கு அதன் பின் வெளிவந்த ‘அன்னக்கொடி’ கொஞ்சம் அட்ரஸ் இல்லாமல் செய்து விட்டது.
தமிழில் நடிப்பதற்கு யாருமே அழைக்காத நிலையில் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் ஆர்யா, விஜய் சேதுபதி, ஷாம் நடிக்க உருவாகி வரும் ‘புறம்போக்கு’ படத்தில் நடிக்க அழைத்ததுமே சம்மதித்து விட்டார்.
மூன்று நாயகர்கள் தமிழ் சினிமாவில் இணைந்து நடிக்கும் படத்தின் ஒரே கதாநயாகி என்ற பூரிப்பு கார்த்திகாவிடம் அதிகமாகவே காணப்படுகிறது.
இது பற்றி அவர் கூறுகையில்,
“இந்த படத்தில் எனது கதாபாத்திரம் மிகவும் கரடு முரடானது. வீடியோ கேம் பிரபலமடைந்த லாரா கிராப்ட் கதாபாத்திரம் போல் இருக்கும்.
எனக்கு இயக்குனர் ஜனநாதன் ஒரு சரித்திரப் பேராசிரியல் போலவே தெரிகிறார். அவ்வளவு உலக விஷயங்களை அவர் தெரிந்து வைத்திருக்கிறார்.
இந்த படத்தில் நான் ஆடியுள்ள ‘டேப் டான்ஸ்’ எனது நடனத் திறமையையும் வெளிக் காட்டும்.
இந்த படத்தில் நடிப்பது ஒரு பெருமையான விஷயம், ” என்று கூறியுள்ளார்.
குலுமனாலியில் நடந்த படப்பிடிப்பை அடுத்து ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் படப்பிடிப்பு நடக்க உள்ளது.
