விமல், ஆஷ்னா நடிக்கும் ‘இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’

சாய் புரொடக்ஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் சர்மிளா மான்ரே, ஆர். சாவந்த் இருவரும் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தை ஏ.ஆர்.முகேஷ் இயக்குகிறார். இவர் ‘இன்று முதல், ஆயுதம்’, கன்னடத்தில் ‘சஜினி’, ஹாலிவுட்டில் ‘ஜோக்கர்’ ஆகிய படங்களை இயக்கியவர்.

சர்மிளா மான்ரே கன்னடப் பட உலகில் பிரபல நடிகை. அங்கு பல முன்னணி நடிகர்களுடன் 40 படங்களுக்கு மேல் கதாநாயகியாக நடித்துள்ளார். சர்மிளாவை கன்னடப் பட உலகில் கதாநாயகியாக அறிமுகம் செய்தவர் ஏ.ஆர்.முகேஷ்.

தன்னை அறிமுகப்படுத்திய இயக்குருக்கே தான் தயாரிக்கும் முதல் படத்தின் இயக்குனர் வாய்ப்பை அளித்திருக்கிறார் சர்மிளா. இப்படத்தில் ஆனந்த்ராஜ், சிங்கம்புலி, வெற்றிவேல் ராஜா மற்றும் பல நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.

படம் பற்றி இயக்குனர் முகேஷ் கூறியதாவது,

“இந்தப் படம் கிளாமர் மற்றும் நகைச்சுவைப் படமாக உருவாகி வருகிறது. முதல் கட்டப் படப்பிடிப்பு லண்டனில் பத்து நாட்கள் நடைபெற்றுள்ளது. இப்போது இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு சென்னையில் நடை பெற்றுக் கொண்டிருக்கிறது. தியேட்டருக்குள் நுழையும் ஒவ்வொருவரும் ஜாலியான ஒரு பொழுது போக்கு அரங்குக்குள் நுழைந்த அனுபவத்தை இந்தப் படம் பார்க்கும் போது உணர்வார்கள். எல்லா தரப்பு மக்களும் ரசிக்கக் கூடிய படமாக இந்தப் படம் இருக்கும்,” என்கிறார் இயக்குனர்.

Read Previous

‘கடைக்குட்டி சிங்கம்’ வரவேற்பு, நெகிழ்ச்சியில் சூர்யா

Read Next

கழுகு 2, படத்தில் பரபரப்பான ஆரம்பக் காட்சி