தெலுங்கில் ‘த்ரிஷ்யம்’ ஆரம்பமானது…

venkatesh and meena

மலையாளத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ‘த்ரிஷ்யம்’ படத்தின் தெலுங்கு ரீமேக் ஆரம்பமாகிவிட்டது.

மோகன்லால் நடித்த கதாபாத்திரத்தில் வெங்கடேஷும், மீனா நடித்த கதாபாத்திரத்தில் மீனாவுமே தெலுங்கில் நடிக்கிறார்கள். மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் நதியா நடிக்கிறார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு காலத்தில் தெலுங்கில் பிரபலமான ஜோடியாக இருந்த வெங்கடேஷ் – மீனா மீண்டும் இணைந்து நடிப்பது அங்கு முக்கியமாக பேசப்பட்டு வருகிறது.

தமிழ், தெலுங்கில் ‘மாலினி 22 பாளையங்கோட்டை’ படத்தை இயக்கிய தெலுங்கு ‘த்ரிஷ்யம்’ படத்தை இயக்குகிறார்.

இப்படத்தை வெங்கடேஷின் குடும்ப நிறுவனமான சுரேஷ் புரொடக்ஷன்ஸ், ஸ்ரீப்ரியாவின் குடும்ப நிறுவனமான ராஜ்குமார் தியேட்டர்ஸ், மற்றும் வைட் ஆங்கிள் கிரியேஷன்ஸ் இணைந்து தயாரிக்கிறார்கள்.

Read Previous

ஒருவர் கூட வராத படம்… – ஒரு அதிர்ச்சித் தகவல்

Read Next

அனிருத் இசையில் தேவா பாடிய கானா பாடல்…