அனிருத் இசையில் தேவா பாடிய கானா பாடல்…

anirudh and sivakarthikeyan

இன்றையா கானா பாலாக்களுக்கெல்லாம் முன்னோடியாக இருப்பவர் இசையமைப்பாளர் தேவா.

தமிழ் சினிமாவில் கானா பாடல்களை அதிகமாக பிரபலப்படுத்தியவர். இவருடைய படங்களில் எப்படியாவது ஒரு கானா பாடல் இடம் பெற்று அந்த பாடலும் ஹிட்டாகி விடும்.

பல புது இளைஞர்களின் வரவால் சமீப காலமாக இவர் படங்களுக்கு இசையமைக்காமல் இருந்தார். இப்போதுதான் ஒரு சில படங்களுக்கு மீண்டும் இசையமைக்க ஆரம்பித்திருக்கிறார்.

இசையமைமப்பாளராக மட்டுமல்லாமல் கானா பாடல்களைப் பாடியும் புகழ் பெற்றவர் தேவா.

இப்போது இசையமைப்பாளர் அனிருத் இசையில் அவருடன் இணைந்து ‘மான் கராத்தே’ படத்தில் ஒரு பாடலைப் பாடியிருக்கிறார்.

‘ஓபன் த டாஸ்மாக்’ என்று ஆரம்பமாகும் அந்த பாடலில் இசையமைப்பாளர் அனிருத்தும் நடிக்க உள்ளாராம்.

ஏற்கெனவே எல்லோரும் டாஸ்மாக்கை மூடுங்க, மூடுங்கன்னு…சொல்ற நேரத்துல இவங்க ‘ஓபன் த டாஸ்மாக்’னு பாட்டாவா பாடிட்டாங்களே…

Read Previous

தெலுங்கில் ‘த்ரிஷ்யம்’ ஆரம்பமானது…

Read Next

தமிழில் நடிக்க மாட்டேன் என்பது பொய்ச் செய்தி – ப்ரியா மணி