‘உத்தம வில்லன்’ படத்தில் கண்ணடிப்பாக உத்தம ‘வில்லனாக’ கமல்ஹாசன்தான் நடிப்பார் என்பதை படத்தோட டைட்டிலைப் பார்க்கிற சின்ன குழந்தை கூட சொல்லிடும்.
அப்படின்னா உத்தம ‘வில்லி’ யார் என்பதுதான் இன்னும் தெரியாமலேயே இருக்கு. ‘வில்லன்’ கமல்னா, அவர் ஜோடியாக நடிக்கிறவங்க ‘வில்லி’யாதான இருக்கணும். 🙂
அவங்க நடிக்கிறாங்க, இவங்க நடிக்கிறாங்கன்னு சஸ்பென்ஸா இருந்துட்டு இருக்கு. ‘விஸ்வரூபம்’ ஹீரோயின்களான ஆன்ட்ரியா, பூஜா குமார் நடிக்கப் போறங்கன்னும் ஒரு செய்தி வெளியாகியிருக்கு.
ஆனால், அதிகாரபூர்வமா அறிவிக்கிற வரைக்கும் யார் அந்த ஹீரோயின்னு நாமளும் ஆச்சரியமா பார்த்துட்டே இருக்க வேண்டியதுதான்.
அதுக்கிடையில படத்துல ஒரு முக்கிய கதாபாத்திரத்துல ‘மரியான்’ பட நாயகி பார்வதி நடிக்கிறது உறுதி ஆகியிருக்கு.
பார்வதியே அதைப் பத்தி சொல்லியும் இருக்காங்க, “ஆமாம், நான் ‘உத்தம வில்லன்’ படத்துல ஒரு சுவாரசியமான கதாபாத்திரத்துல நடிக்கிறேன். கமல் சார் கூட நடிக்கப் போறத ரொம்ப ஆர்வமா எதிர்பார்த்துட்டிருக்கேன். கண்டிப்பா நான் நிறையே கத்துக்க முடியும்னு நினைக்கிறேன், ” என சொல்லியிருக்காங்க.
சீக்கிரம் யார் ஹீரோயின்னு சொல்லிடுங்க, இல்லன்னா நம்ம ஆட்கள் எல்லார் பேரையும் மாத்தி மாத்தி எழுதிட்டிடேயிருப்பாங்க…