ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் பரபரப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வரும் ‘உத்தம வில்லன்’ படத்தல் கமல்ஹாசன் இரு வேடங்களில் நடிக்கிறார்.
‘உத்தமன்’ என்ற 8ம் நூற்றாண்டு கூத்துக் கலைஞன் கதாபாத்திரத்திலும், மனோரஞ்சன் என்ற 21ம் நூற்றாண்டின் சினிமா உச்ச நட்சத்திரமாக (அதாவது சூப்பர் ஸ்டார்) மற்றொரு கதாபாத்திரத்திலும் நடிக்கிறார்.
மனோரஞ்சனைக் கண்டெடுத்து நட்சத்திர அந்தஸ்துக்கு உயர்த்திய குருவாக சினிமா இயக்குனராக கே. பாலசந்தர் நடிக்கிறார்.
இது என்ன வம்பா இருக்கே ? ஆஹா…என்னமோ பண்றாங்கப்பா…உச்ச நட்சத்திரம்னா , சூப்பர் ஸ்டார்னுதான அர்த்தம். அப்படின்னா…யாரைப் பத்தி இந்த படம். கண்ணாடி வீட்டுக்குள் இருந்து கொண்டே கல்லா ?. இனி, இரண்டு நாளைக்கு ஃபேஸ்புக், ட்விட்டர்ல ரணகளம்தான்…
மனோரஞ்சனின் மனைவியாக ஊர்வசியும், மனோரஞ்சனின் மாமனாராக இயக்குனர் கே.விஸ்வநாத்தும் நடிக்கிறார்கள்.
8ம் நூற்றாண்டில் நடக்கும் உத்தம வில்லனில் நடக்கும் கதையில் மனநோயால் பாதிக்கப்பட்ட இளவரசியாக பூஜா குமாரும், 21ம் நூற்றாண்டு மனோரஞ்சனின் ரகசியக் காதலியாக ஆன்ட்ரியாவும் நடிக்கின்றனர்.
முத்தரசன் என்ற 8ம் நூற்றாண்டுக் கொடுங்கோல் சர்வாதிகாரியின் பாத்திரத்தில் நாசர், ஜேகப் ஜக்காரியா என்ற பாத்திரத்தில் ஜெயராம், இவரின் வளர்ப்பு மகளாக முக்கிய கதாபாத்திரத்தில் பார்வதி மேனன் சொக்கு செட்டியார் என்ற கதாபாத்திரத்தில் எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோரும் நடிக்கிறார்கள்.
படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.