‘யாமிருக்க பயமே’ – ஒரு த்ரில்லர் படத்தை முழுக்க முழுக்க நகைச்சுவை கலந்து எடுத்திருக்கிறார்கள். இப்படத்தின் டிரைலர் வரும் 1ம் தேதியன்று வெளியிடப்பட உள்ளது.
“இப்படத்தின் டிரைலர் ரசிகர்களை நிச்சயம் பெரிதளவில் கவரும். படத்தின் இசை வருகின்ற ஏப்ரல் மாதம் 16ஆம் தேதி வெளியிடப் பட உள்ளது. அறிமுக இசை அமைப்பாளர் எஸ்.என்.பிரசாத்தின் வித்தியாசமான இசையும் படத்தின் இசை மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியிருக்கிறது,” என படத்தின் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் தெரிவித்துள்ளார்.
அறிமுக இசை அமைப்பாளர் எஸ்.என். பிரசாத், ஏ.ஆர். ரகுமான் இசைப் பள்ளியில் பயின்றவர்.
ஆர்.எஸ்.இன்ஃபோடெய்ன்மென்ட் தயாரிப்பில் டீகே இயக்கத்தில் பிரசாத் இசையமைப்பில் கிருஷ்ணா, கருணாகரன், ரூபா மஞ்சரி, ஓவியா மற்றும் பலர் நடிக்கும் படம் ‘யாமிருக்க பயமே.’
பதினாறுக்கும் மேற்பட்ட புதிய தொழில் நுட்ப கலைஞர்களை அறிமுகபடுத்தும் ‘யாமிருக்க பயமே’ மே மாதம் வெளி வர உள்ளது .