கவுண்டமணி கலக்கும் ‘49 ஓ’ – அம்மா….பாடல் வீடியோ…

49 o goundamaniஜீரோ ரூல்ஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் ஆரோக்கிய தாஸ் இயக்கத்தில் கே இசையமைத்து கவுண்டமணி நாயகனாக நடிக்கும் ‘49 ஓ’ படத்தின் ‘அம்மா போல அள்ளித் தரும் மழைதான்….’ சிங்கிள் டிராக் சற்று முன்னர் வெளியிடப்பட்டது.

யு டியூப்பில் உள்ள இந்த பாடல் வீடியோவில் பாடல் பதிவின் போது, கவுண்டமணியும் உடனிருந்துள்ளார். அவர் பாடலை ரசித்து தாளம் போடுவதும், அவருக்கே உரிய ஸ்டைலில் நடனமாடும் விதத்தில் வீடியோவில் உள்ள புகைப்படங்களும் ரசிகர்களை வெகுவாகக் கவரும்.

அழகான கிராமிய இசைப் பின்னணியில் யுகபாரதி எழுத ஜெயமூர்த்தி பாடியுள்ள இந்த பாடலுக்கு கே இசையமைத்திருக்கிறார்.

முதன் முறையாக கேட்கும் போதே பாடல் தாளம் போட வைக்கிறது.

‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் ‘இந்த பொன்னுங்களே…’ பாடலைப் பாடிய வித்தியாசமான குரலுக்குச் சொந்தக்காரர்தான் ஜெயமூர்த்தி. அவருடைய குரல் இந்த ‘அம்மா போல….’ பாடலிலும் கணீரென்று ஒலிக்கிறது.

ஒரு பாடலிலேயே ‘49 ஓ’ வைப் பற்றி பேச வைத்து விட்டார்கள்.

ஒன்றே நன்றாக உள்ளதால் மற்றதும் நன்றாக இருக்கும் என நம்பலாம்.

பாடல் வீடியோ….

http://youtu.be/YOVp9gqj-rE

Read Previous

‘இனம்’ படத்தைத் தடுத்தவர்களை ‘குண்டர்கள்’ என்கிறார் சந்தோஷ் சிவன் சகோதரர்…

Read Next

‘சைவம்’ படத்தில் இசை வாரிசு…