சூர்யாவுடன் மீண்டும் நயன்தாரா ?

aadhavan surya and nayantharaமுன்னணி ஹீரோக்கள் நடிக்கும் படம் என்றால், அவர்களுக்கு ஜோடியாக எந்த நடிகை நடிக்கப் போகிறார் என்ற கேள்வியும் எழுந்து விடுகிறது.

‘அஞ்சான்’ படத்திற்குப் பிறகு சூர்யா, வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க உள்ள பெயரிடப்படாத படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கப் போகிறார் என செய்தி வெளியாகியுள்ளது.

நயன்தாரா தற்போது தமிழில் சிம்புவுடன் ‘இது நம்ம ஆளு’ படத்திலும், ஜெயம் ரவி ஜோடியாக ஒரு படத்திலும், உதயநிதி ஜோடியாக ‘நண்பேன்டா’ படத்திலும் நடித்து வருகிறார்.

சூர்யா – நயன்தாரா  இதற்கு முன் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய ‘ஆதவன்’ படத்தில் இணைந்து நடித்தனர். அந்த படம் மாபெரும் வெற்றிப் படமாக அமைந்தது.

அதே சமயம் ஸ்ருதிஹாசனும், சூர்யா ஜோடியாக நடிக்கலாம் என மற்றொரு செய்தியும் உலா வருகிறது. இவர்கள் இதற்கு முன் ‘7ம் அறிவு’ படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

இப்படத்தின் பூஜை கடந்த வாரம் சென்னையில் நடைபெற்றது. அஞ்சான் படப்பிடிப்பு முடிந்தவுடன் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகப் போகிறது.

பொருத்தமான ஜோடி கிடைக்கிறது கூட எவ்வளவு கஷ்டமா இருக்கு….

 

Read Previous

ராமானுஜன் – மாபெரும் மேதையை மறந்த சமூகம்…

Read Next

இனி, ரீமேக் படங்களை இயக்க மாட்டேன் – ஒரு இயக்குனரின் சபதம்