ரஜினிகாந்த் அழைப்பாரா ? காத்துக் கிடக்கும் நடிகர்…

kochadaiiyaan 3004‘கோச்சடையான்’ படத்தைப் பற்றிய பல செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

‘மோஷன் கேப்சரிங் டெக்னாலஜி’ முறையில் படமாக்கப்பட்டுள்ள இப்படத்தில் ரஜினிகாந்த்திற்குப் பதிலாக வேறு சில நடிகர்கள் நடித்துள்ளதாகவும், நடனமாடியுள்ளதாகவும் செய்திகள் வந்தன.

ரஜினிக்குப் பதிலாக ‘ருத்ரதாண்டவம்’ நடனமாடியுள்ள யுவராஜ், சில நாட்களாக அனைத்து பத்திரிகைகளிலும் ‘கோச்சடையான்’ பற்றி பேட்டி கொடுத்து வருகிறார்.

இன்று வெளிவந்த வார இதழ் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், ரஜினிகாந்த் அவரை இன்னும் அழைத்துப் பாராட்டாமல் இருப்பது குறித்து அவரது வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

“கோச்சடையான்’ படத்துல என்னோட வேலை முடிஞ்சதும், அந்த யூனிட்டோட நான் டச்லயே இல்லை. ரஜினி என்ன சொன்னார். என்ன பேசிக்கிட்டாங்கன்னு எதுவுமே எனக்குத் தெரியாது.

அவர் நடிக்காத படத்தை தேடிப் போய் பாராட்டுகிறவர் ரஜினி. அவரோட படத்துல அவருக்காக நான் ஆடியிருக்கேன். கட்டாயம் அவர் என்னை கூப்பிட்டு பாராட்டுவார்னு நம்பிக்கை இருக்கு.

ஒவ்வொரு நாளும்  அவர்கிட்ட இருந்து அழைப்பு வரும்கிற நினைப்போடதான் படுக்கைக்கே போறேன்,” என தெரிவித்துள்ளார்.

யுவராஜின் ஏக்கத்தை தீர்த்து வைப்பாரா ரஜினிகாந்த் ?

 

Read Previous

அப்பாடா…‘அஞ்சான்’ டைட்டிலை காட்டிட்டாங்க…

Read Next

‘கோச்சடையான்’ – ரஜினிக்காக நடித்த ஜீவா…