தமிழ் சினிமா எங்கே போகிறது என்றே தெரியவில்லை. இந்த ‘First Look’ (முதல் பார்வை) படுத்துற விஷயமிருக்கே…அப்பப்பா…
படத்தோட ஸ்டில்லுக்கு ஒரு முதல் பார்வை, படத்தோட டிரைலருக்கு முதல் பார்வை, டீசருக்கு முதல் பார்வை இப்படி ஆரம்பிச்சது, இப்ப படத்தோட டைட்டில் வரைக்கும் ‘முதல் பார்வை’ய கொண்டு வந்துடுச்சி.
கேட்டால், படத்துக்கு விளம்பரம், மார்க்கெட்டிங் டெக்னிக்னு சொல்றாங்க…
இனி, எல்லாரும் படத்தோட ‘டைட்டில் லோகோ’ முதல் பார்வை-னு ஆரம்பிச்சிடுவாங்க. இதோட நிறுத்திக்குங்கப்பா…அப்புறம் டைட்டிலோட முதல் எழுத்து – முதல் பார்வை, இரண்டாம் எழுத்து – முதல் பார்வைனு ஆரம்பிச்சிடாதீங்க.
இன்னைக்கு காலையில சூர்யா – லிங்குசாமி முதல் முறையா இணையும் ‘அஞ்சான்’ படத்தோட டைட்டில் வெளியிட்டிருக்காங்க.
நாளைக்கு, ‘அஞ்சான்’ படத்தோட முதல் நாளிதழ் விளம்பரம் வருதாம்.
அடடா….இந்த ஃபர்ஸ்ட் லுக் தொல்லை, தாங்க முடியலைடா சாமி…