‘கோச்சடையான்’ – ரஜினிக்காக நடித்த ஜீவா…

kochadaiiyaan jeeva

‘கோச்சடையான்’ படம் இன்னும் சில நாட்களில் வெளிவர உள்ள நிலையில் அந்த படத்தைப் பற்றிய பல செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அவற்றில், நாம் தரும் புதிய செய்தி இதோ…

‘கோச்சடையான்’ படத்தில் ரஜினிக்காக பெரும்பாலான காட்சிகளில் நடித்தவர் ஜீவா. 2012ம் ஆண்டில் ஆரம்பமான ‘கோச்சடையான்’ படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு லண்டனில் ஆரம்பமான போதே,  ‘மோஷன் கேப்சரிங்  டெக்னாலஜி’ முறையில், அதாவது ‘சலனப் பதிவு தொழில்நுட்பம்’ அடிப்படையில் ரஜினிகாந்த் நடிப்பதற்குப் பதிலாக அவரின் ‘டூப்’ போல பல காட்சிகளில் நடித்தவர் ஜீவா.

‘கோச்சடையான்’ படப்பிடிப்பு முழுவதும் லண்டனில்தான் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

kochadaiiyaan rajinikanth jeevaஜீவா,  விஜய் டிவியின் ‘லொள்ளு சபா’ நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர். அந்த நிகழ்ச்சியில் முதலில் நடித்த சந்தானம், திரைப்படங்களில் அறிமுகமாகி நடிக்க ஆரம்பித்ததால், அதன் பின் ஜீவா சில பல எபிசோடுகளில் தொடர்ந்து நடித்தார்.

அது மட்டுமல்ல சில திரைப்படங்களிலும் நகைச்சுவைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். ஆனால்,  அவருக்கு தமிழ்த் திரையுலகில் இன்னும் ஒரு பெரிய ‘பிரேக்’ கிடைக்கவில்லை.

‘கோச்சடையான்’ படத்திற்குப் பிறகு தமிழ்த் திரையுலகில் ஒரு பெரிய ‘ரவுண்டு’ வருவார் என எதிர்பார்க்கலாம்…

 

Read Previous

ரஜினிகாந்த் அழைப்பாரா ? காத்துக் கிடக்கும் நடிகர்…

Read Next

“வாடா..டேய்..என் புருஷா..” – கல்யாணப் பொண்ணு சின்மயி பாடிய பாடல்…