“வாடா..டேய்..என் புருஷா..” – கல்யாணப் பொண்ணு சின்மயி பாடிய பாடல்…

mosakutty 3004‘மைனா, சாட்டை’ ஆகிய படங்களைத் தயாரித்த ஷலோம் ஸ்டூடியோஸ் ஜான் மேக்ஸ் அடுத்ததாக ‘மொசக்குட்டி’ என்ற படத்தைத் தயாரித்து வருகிறார்கள்.

இப்படத்தில் இடம் பெறும் ஒரு பாடலைப் பாடுவதற்காக பாடகி சின்மயி பாடினால் நன்றாக இருக்கும் என்று முடிவு செய்து படத்தின் இயக்குனர் ஜீவன், இசையமைப்பாளர் ரமேஷ் விநாயகம் சின்மயியை அழைத்திருக்கிறார்கள். அவரும் ஸ்டூடியோவிற்கு வந்து பாடுவதற்காக, மைக் முன் நின்று பாடல் வரிகளை வாங்கிப் பார்த்து அதிர்ச்சி ஆகி வெளியே வந்து விட்டாராம்.

அவர் அதிர்ச்சியடைய காரணமாக இருந்தது பாடல் வரிகள். பின்னே, விரைவில் திருமணம் நடைபெற இருக்கும் நேரத்தில் இப்படிப்பட்ட பாடல் வரிகளைப் பார்த்தால் அதிர்ச்சியடையாமல் என்ன செய்வார் சின்மயி.

அப்படி என்ன வரிகள் என்று பார்த்தால் “வாடா.. டேய்… எம் புருசா நான் தாரேன் புதுப்பரிசா… ஓம் போல பேரழகா… பத்து பத்தா பெத்து தாரேண்டா…,” என்று போகிறதாம் வரிகள். இசை அமைப்பாளர் ரமேஷ் விநாயகம் முழுப்பாடலையும் பாடிக் காட்டியதும், சின்மயி மிகவும் மகிழ்ச்சியாகிஇந்தப்பாடல் உண்மையிலேயே வரப்போகும் என் கணவருக்கு என்னோடபுதுப்பரிசாகத்தான் இருக்கும்.

என் கேரியரிலும் இது முக்கியமானபாடலாக இருக்கும் என்று கூறி இந்தப்பாடலை எனக்கு கொடுத்ததற்குமி கவும் நன்றி என மகிழ்ச்சியோடு மிகவும் உற்சாகமாக பாடிக்கொடுத்திருக்கிறார். பின் அவரோடு இணைந்து ஹரிசரணும் பாடியுள்ளார். பாடல் மிகவும் நன்றாகவந்துள்ளது என்று இசை அமைப்பாளர், இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் மொத்த யூனிட்டும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

 

Read Previous

‘கோச்சடையான்’ – ரஜினிக்காக நடித்த ஜீவா…

Read Next

தேவையின்றி குற்றம் சுமத்துகிறார்கள் – அமலா பால்