2014ம் ஆண்டில் இதுவரை வந்த தமிழ்த் திரைப்படங்களில் உண்மையாகவே வெற்றி பெற்றிருக்கும் படம் என்று கோடம்பாக்கத்தில் உள்ள அனைவரும் சொன்ன ஒரே படம் ‘கோலி சோடா’.
மீதி படங்கள் எல்லாம் ‘‘ஆர்ப்பரிக்கும் வெற்றி, ஆரவாரமான வெற்றி, மாஸ் ஹிட், சூப்பர் கலெக்ஷசன், பார்த்தவர்கள் பாராட்டும், பாராட்டு மழையில், பத்திரிகைகள் பாராட்டும்”, என பத்திரிகைகளில் வந்ததெல்லாம் வெறும் விளம்பரம் மட்டுமே.
இன்றைய ஃபேஸ்புக், ட்விட்டர் ரசிகர்களுக்கு இது கூடவா தெரியாமல் போகும். ஆனால், நம்மவர்களுக்கு அதைப் பற்றி எந்த கவலையும் கிடையாது.
சில பல லட்சங்களில் மட்டுமே தயாரிக்கப்பட்ட ‘கோலி சோடா’ படம், எந்த நட்சத்திர அந்தஸ்தும் இல்லாமல் இப்படிப்பட்ட வெற்றியைப் பெற்றது மிகவும் பாராட்டுக்குரிய ஒன்று.
சில கோடிகள் வசூலை திரையரங்குகள் மூலமும், 3 கோடி ரூபாய்க்கும் மேல் வரவை சாட்டிலைட் ரைட்ஸ் மூலமும் அள்ளிய சிறப்பு பெற்ற படம் ‘கோலி சோடா’.
இந்த வெற்றி தந்த உற்சாகத்தில் ‘கோலி சோடா’ படத்தின் இயக்குனர் விஜய் மில்டன், அடுத்து ஏ.ஆர். முருகதாஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், இமான் இசையமைப்பில், விக்ரம் நாயகனாக நடிக்கும் படத்திற்குத் தயாராகி விட்டார்.
அடுத்த படத்திலும் வெற்றி பெற வாழ்த்துவோம்…