‘கொலைகாரன்’ முதல் கட்டப் படப்பிடிப்பு நிறைவு

தியா மூவீஸ் சார்பாக பி.பிரதீப் தயாரிக்க ஆன்ட்ரூ லூயிஸ் இயக்கும் படம் ‘கொலைகாரன்’.

விஜய் ஆண்டனி, ஆஷிமா நர்வால், அர்ஜுன், நாசர், சீதா, விடிவி கணேஷ் மற்றும் பலர் இந்தப் படத்தில் நடிக்கிறார்கள்.

விஜய் ஆண்டனி, அர்ஜுன் முதல் முறையாக இந்தப் படத்தில் இணைந்து நடிக்கிறார்கள்.

இப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. அதில் அர்ஜுன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு முடிவடைந்துள்ளன.

அடுத்த கட்டப் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாக உள்ளது.

Read Previous

காதலில் விழுந்தாரா விஜயகாந்த் மகன் ?

Read Next

1 கோடி உதவி, சூர்யாவுக்கு வைரமுத்து, விவேக் நன்றி