நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியன் வெளிநாட்டுப் பெண் ஒருவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
சண்முகபாண்டியன் “சகாப்தம், மதுர வீரன்” ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது ‘தமிழன் என்று சொல்’ படத்தில் நடித்து வருகிறார்.
அவருடைய இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளத்தில் அந்த பெண்ணுடன் இருக்கும் அவருடைய புகைப்படத்தைப் பகிர்ந்து வாழ்த்து சொல்லியிருக்கிறார்.
அதில், “என்னுடைய…………………………………..இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். இந்த வருடம் சிறப்பாக அமையட்டும், அங்கே இருந்திருக்க வேண்டும் என்று விரும்பினேன்,” எனக் கூறியுள்ளார்.
என்னுடைய…..என பதிவிட்டு அதன் பின் விதவிதமான ஸ்மைலிகளை அதில் சேர்த்துள்ளார்.
https://www.instagram.com/p/BloPVkugN2-/?taken-by=shanmugapandian
ஏற்கெனவே, ஜுன் மாதத்தில் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார் சண்முகபாண்டியன்.
அதில், “காதல், ஆம்ஸ்டர்டாம், புதிய நண்பர்கள், என் வாழ்க்கையின் இனிமையான நாட்கள், என் வாழ்க்கையின் சிறப்பான 7மாதங்கள், மிஸ்ஸிங், திரும்ப செல்ல விரும்புகிறேன்” எனக் கூறியிருக்கிறார்.
அந்தப் பெண் சண்முகபாண்டியன் தோழியா அல்லது காதலியா என்பதை அவர்தான் சொல்ல வேண்டும்.
https://www.instagram.com/p/BjrfaEfAffg/?taken-by=shanmugapandian