‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தின் தயாரிப்பாளரான நடிகர் சூர்யா, படத்தில் கிடைத்த லாபத்தில் 1 கோடி ரூபாயை விவசாய வளர்ச்சிக்காக நன்கொடையாகத் தந்தார்.
அதற்கு விவசாயிகளும், ரசிகர்களும் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகிறார்கள்.
கவிஞர் வைரமுத்து, நடிகர் விவேக் ஆகியோரும் சூர்யாவின் உதவிக்கு அவர்களது பாராட்டைத் தெரிவித்துள்ளார்கள்.
அண்ணன் சிவகுமார் பெற்றெடுத்த
சிங்க மைந்தர்கள்
வேளாண்குடி மக்களுக்கு ஒரு கோடி ரூபாய்
வழங்கியதை வரவேற்கிறேன்; வாழ்த்துகிறேன்.
அன்பு சூர்யா! கார்த்தி!
உங்களால் கலைக்குடும்பத்தின்
சமூகமதிப்பு உயர்ந்திருக்கிறது.
கலைத்தொண்டு தொடரட்டும்;
காலம் கைதட்டும்.@Suriya_offl @Karthi_Offl— வைரமுத்து (@Vairamuthu) July 25, 2018
கடைக்குட்டி சிங்கத்தின் வெற்றியை, இயற்கை விவசாயிகள் உடன் கொண்டாடி அவர்களுக்கு பெரும் நிதி உதவியும் செய்த சூர்யா, கார்த்தி மற்றும் அகரம் அறக்கட்டளைக்கு நெஞ்சு நெகிழ் நன்றிகள். Exemplaryexample to others @agaramvision @Suriya_offl @Karthi_Offl @sivakumar @pandiraj_dir
— Vivekh actor (@Actor_Vivek) July 25, 2018
‘கடைக்குட்டி சிங்கம்’ வெற்றி விழாவில் விவசாய வளர்ச்சிக்காக பெரிதும் பாடுபட்டு வரும் 5 விவசாயிகளுக்கு சூர்யா தலா 2 லட்ச ரூபாய் வழங்கினார்.
அவரிடம் இருந்து 2 லட்ச ரூபாய் பெற்றவர்களில் ஒருவரான திருவலஞ்சுழி சேகர் என்பவர் சூர்யாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
“எனக்கு சொந்த நிலம் இல்ல. குத்தகைதான். சூர்யா சார் கொடுத்த 2 லட்சத்துலதான் நிலம் வாங்க போறேன். காரட், பீட்ரூட்டை தஞ்சை மண்ணில் விளைவிச்ச மாதிரி வாங்கும் நிலத்தில் ஏலக்காய் பயிரிட்டு அதன் வாசனையை சூர்யா சாருக்கு நன்றியாக்குவேன்,” என அவர் தெரிவித்துளளார்.