தமிழ்த் திரைப்பட நாயகர்களுக்கு தற்போது திடீரென மும்பை மீது திடீர் பாசம் வந்து விட்டது. மும்பையில் இருக்கும் ரவுடிகளை ஒழிக்கவும், தீவிரவாதிகளை அழிக்கவுமே அவர்கள் புறப்பட்டு விட்டார்கள்.
இதெல்லாம் சினிமாலதான்….அதுக்குள்ள அதிர்ச்சியாகிடாதீங்க. ‘துப்பாக்கி’ படத்துல தீவிரவாதிகள் கிட்ட இருந்து மும்பையை காப்பாத்தின விஜய், ‘தலைவா’ படத்துல லோக்கல் ரவுடிங்க கிட்ட இருந்து மும்பையைக் காப்பாத்தினாரு.
‘ஆரம்பம்’ படத்துல நண்பன் ராணாவைக் கொன்னவங்களைப் பழிவாங்க மும்பையில இருக்கிற மோசமான அரசியல்வாதிகளை எதிர்த்துப் போராடினாரு அஜித்.
அடுத்து இப்ப சூர்யா, ‘அஞ்சான்’ படத்துல மும்பையில இருக்கிற ரவுடிங்களை எதிர்த்து போராடப் போறாரு, அனேகமா அந்த லிஸ்ட்ல தீவிரவாதிங்க கூட இருக்கலாம்.
அது என்ன தமிழ் நாட்டுப் பக்கம் படம் எடுக்கலைன்னு கேக்கறீங்க…எவ்வளவு நாளைக்குத்தான் சென்னையிலயே படத்தை எடுக்கறது….அப்படியே மும்பை, டெல்லின்னு போனாதானே நல்லா இருக்கும்.
ம்ம்ம்..‘அஞ்சான்’ படத்தைப் பார்த்து அஞ்சி ஓடாம இருந்தால் சரி…
