அடுத்த ‘சூப்பர் ஸ்டார்’ விஜய் என்று ஒரு வார இதழ் வெளியிட்ட கருத்துக் கணிப்புக்குப் பிறகு பல சர்ச்சைகள் எழுந்தன. விஜய் ரசிகர்களும், அஜித் ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் மாறி மாறி கமெண்ட் அடித்து வருகிறார்கள்.
அதைத் தொடர்ந்து ஒரு ஆங்கில நாளிதழ் வெளியிட்ட கருத்துக் கணிப்பில் 2013ம் ஆண்டின் சிறந்த இளம் ஹீரோக்ககளின் பட்டியலில் விஜய்க்கு 5வது இடமே கிடைத்தது.
தற்போது முன்னணி நடிகையான த்ரிஷாவின் மனம் கவர்ந்த ஹீரோக்கள் பட்டியலிலும் விஜய்க்கு 5வது இடத்தைத்தான் கொடுத்திருக்கிறார். அவருடைய பட்டியலில் முதலிடத்தைப் பிடித்திருப்பது அஜித். இரண்டாவதாக சூர்யா, மூன்றாவதாக விக்ரம், நான்காவதாக கமல் இடம் பிடித்துள்ளனர்.
வட அமெரிக்காவில் உள்ள செயின்ட் லூயிஸ் நகரில் நடைபெற்ற வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்களின் அமைப்பான ஃபெட்னாவின் 27வது ஆண்டு விழாவில் த்ரிஷா சிறப்பு விருநதினராக கலந்து கொண்டார். அப்போது அவரிடம் நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் யாருடன் உங்களுக்கு ஜோடியாக நடிக்கும் போது கெமிஸ்ட்ரி நன்றாக இருந்தது என்ற கேள்விக்குத்தான் மேற்கண்ட பட்டியலை அளித்துள்ளார் த்ரிஷா.
விஜய் ஜோடியாக த்ரிஷா நடித்த ‘கில்லி’ படம் மாபெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்துதான் த்ரிஷா தமிழில் முன்னணி நடிகையாக வந்தார். தொடர்ந்து “திருப்பாச்சி, ஆதி, குருவி” ஆகிய படங்களிலும் விஜய் ஜோடியாக நடித்துள்ளார்.
த்ரிஷாவின் இந்த பதில் விஜய் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.