10 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக விளங்கி வரும் த்ரிஷா, சமீபத்தில் வட அமெரிக்காவில் உள்ள செயின்ட் லூயிஸ் நகரில் நடைபெற்ற வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்களின் அமைப்பான ஃபெட்னாவின் 27வது ஆண்டு விழாவில் கலந்து கொண்ட போது கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில் அவருக்குப் பிடித்த நடிகர்களில் விஜய்க்கு கடைசி இடம் கொடுத்து ஒரு பரபரப்பை ஏற்படுத்தினார்.
ஏற்கெனவே, ‘அடுத்த சூப்பர் ஸ்டார்’ பட்டம் யாருக்கு, ஒரு ஆங்கில நாளிதழ் வெளியிட்ட டாப் நடிகர்கள் யார் என சில சர்ச்சைகள் எழுந்த நிலையில் த்ரிஷாவும் விஜய் பற்றி பேசப் போக அனைத்து மீடியாக்களும் அதைச் செய்தியாக வெளியிட்டன.
இவற்றுக்கெல்லாம் பதிலளிக்கும் வகையில் த்ரிஷா அவருடைய ட்விட்டர் வலைத்தளத்தில் ஒரு கருத்தை பதிவு செய்திருக்கிறார். அதில்,
“ஃபெட்னா’வில் நான் பேசியதை வேறு விதமாக தயவு செய்து ஊதி பெருசாக்காதீர்கள். நான் நடித்துள்ள சூப்பர் ஸ்டார்களுடன் எப்போதுமே மரியாதை வைத்துள்ளேன், அவர்களைப் பார்த்து ஆச்சரியப்பட்டுள்ளேன். யாரையும் புண்படுத்த வேண்டும் என்பது எனது நோக்கமில்லை” என்று தெரிவித்திருக்கிறார்.
த்ரிஷாவின் கருத்துக்கு நாமும் மதிப்பளிக்கும் விதத்தில்தான் அவருடைய கருத்தையும் இங்கே பதிவு செய்கிறோம்.
இருந்தாலும் யு டியூப்பில் நமக்குக் கிடைத்த ‘ஃபெட்னா வீடியோ ஆதாரத்தின்படி அஜித் ரசிகர்கள் பெருமைப்பட்டுக் கொள்ளலாம். ஏனென்றால் சினிமாவிற்கு வருவதற்கு முன்பே தனக்கு அஜித்தைப் பிடிக்கும் என பெருமையாகப் பேசியுள்ளார். கேள்வியாளர் கேள்வி கேட்டதும் சிறிதும் யோசிக்காமல் ‘பட்’ என்று பதிலளித்துள்ளார்.
இது த்ரிஷாவின் மனம் திறந்த ஒரு பதில். கீழே உள்ள வீடியோவில் 5.08 மணித் துளியில் மேற்குறிப்பட்ட கேள்வியும், பதிலும் அமைந்துள்ளது….