லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் நயன்தாரா, யோகி பாபு, ஜாக்குலின், சரண்யா மற்றும் பலர் நடித்திருக்கும் படம் ‘கோலமாவு கோகிலா’.
இப்படம் ஆகஸ்ட் 17ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
படம் பற்றி இயக்குனர் நெல்சன் கூறியதாவது,
“தயாரிப்பு மற்றும் வினியோகத் துறையில் லைக்கா புரொடக்ஷன்ஸ் மிகப் பெரிய நிறுவனமாக தங்களை நிரூபித்துள்ளது. ஒவ்வொரு படத்திற்கும் தயாரிப்பாளர்கள் எடுக்கும் முயற்சிகள் நம்ப முடியாதவை. சரியான நேரத்தில், சரியான இடத்தில், சரியான விஷயங்களை செய்வது என்பதுதான் வியாபாரத்தில் வெற்றி பெறும் ரகசியம். லைக்காவிற்கு அவைவை மிகவும் பொருத்தமானவை.
லைகா ப்ரொடக்ஷன்ஸ், கோலமாவு கோகிலாவை அவர்கள், சிறப்பான விளம்பர விஷயங்களால் மக்களிடம் கொண்டு போய் சேர்த்து வருகிறார்கள். அது படத்துக்கு கூடுதல் மைலேஜாக அமைந்திருக்கிறது,” என்கிறார்.
இப்படத்தின் சிங்கிள் பாடலாக, அனிருத் இசையில் சிவகார்த்திகேயன் எழுதி வெளிவந்த ‘கல்யாண வயசு….’ பாடல் யு டியூபில் 4 கோடி பார்வைகளைத் தொட உள்ளது.