ஐபிஎல் போட்டிகளில் தொகுப்பாளராகவும், வர்ணனையாளராகவும் பணியாற்றியவர் சமீர் கோச்சார்.
தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘ஹாத் சே ஹாத் மிலா’ என்ற எயிட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அவருடைய டிவி பயணத்தை ஆரம்பித்து, இன்று ஹிந்தி சினிமா வரை வளர்ந்திருக்கிறார். ‘ஜனத், ஹவுஸ்புல் 3, தும்சே பியார் கித்னா’ ஆகிய படங்களிலும், நெட்பிளிக்ஸ் வலைதளத்தில் தற்போது வரும் ‘சேக்ரட் கேம்ஸ்’ என்ற தொடரில் ரசிகர்களின் வரவேற்புடன் நடித்து வருகிறார்.
தற்போது தமிழ்த் திரைப்படத்திலும் நடிக்க உள்ளார். செஞ்சுரி இன்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரிப்பில், அமலா பால் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வரும், ‘அதோ அந்த பறவை போல’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார்.
படத்தில் அவருடைய கதாபாத்திரத்தின் வலிமையை உணர்ந்து நடிக்க சம்மதம் தெரிவித்து, படப்பிடிப்பிலும் படக்குழுவினரை ஆச்சரியத்தில் அசத்தி வருகிறாராம் சமீர் கோச்சார்.